A god-fearing young woman who takes up the job of a caretaker in a rich household tries to take revenge on her lustful employer.

பேய்க் கதைகளை பார்த்துப் பார்த்து தமிழ் சினிமா ரசிர்கர்கள் டயர்டாகிவிட்டனர். ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எடுத்தபோது ஹாரர் படங்களுக்கு தான் அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருந்தது. ஹாரர் படம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியிருக்கிறது நெஞ்சம் மறப்பதில்லை.
மிஷ்கின் எப்படி பிசாசு எனும் வித்தியாசமான ஹாரர் படத்தை கொடுத்தாரோ அதே போன்று செல்வராகவன் தன் ஸ்டைலில் ஒரு ஹாரர் படத்தை கொடுத்திருக்கிறார். அப்பாவியை கெட்டவன் கொலை செய்ய அவர் ஆவியாக வந்து பழி வாங்கும் பழைய ஃபார்முலாவை தான் செல்வராகவன் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அதை அவர் பயன்படுத்திய விதம் தான் அருமை.
ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த கடவுள் பக்தி அதிகம் உள்ள மரியம்(ரெஜினா கசான்ட்ரா) பணக்கார தம்பதியான ராம்சே(எஸ்ஜே சூர்யா), ஸ்வேதாவின்(நந்திதா ஸ்வேதா) குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலையில் சேர்கிறார்.
குறுக்கு வழியில் முன்னுக்கு வந்த ராம்சேவுக்கு மரியாவை பார்த்ததுமே காம உணர்வு தான் ஏற்படுகிறது. அவர் மரியாவிடம் சில்மிஷம் செய்ய முயற்சி செய்ய அவர் விலகிச் செல்கிறார். ராம்சேவால் கொலை செய்யப்படுகிறார் மரியம். ஆனால் அவர் ராம்சேவை பழி வாங்க ஆவியாக வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
எஸ்.ஜே. சூர்யா தன் நடிப்பால் மிரட்டுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பக்கபலமாக இருக்கிறது. படத்தில் சில விஷயங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. மரியத்திற்காக ரசிகர்கள் பெரிதாக பாவப்படவில்லை. மேலும் கொடூரனான ராம்சேவை வெறுக்கவும் இல்லை. ஸ்வேதாவை நாம் பெரிதாக தெரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தானோ என்னவோ கிளைமாக்ஸ் காட்சி திருப்தி அளிப்பதற்கு பதில் வித்தியாசமான உணர்வை அளிக்கிறது.
This is also why the climax leaves us indifferent when it should have made us feel satisfied.