Aadhaar PAN Link Tamil: செக் செய்வது எப்படி..? ரொம்ப ஈசி பாஸ்..!

Rate this post

Aaadhaar and pan card link: பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது. ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

இதற்கு முக்கியக் காரணம் மார்ச் 31க்குள் ஆதார் – பான் எண் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே அனைவரும் ஆதார் – பான் எண் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

ஆதார் பான் இணைப்பை செக் செய்வது எப்படி..?

1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home

2. லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

3. Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்

4. ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.

5. இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும். தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

As Content Writer, I take on leadership within our content creation team, overseeing the development of error-free educational content. My primary responsibility is to produce and analyse high-quality content educating and informing the aspirants about upcoming government exams published on our website. I have more than 6 years experience in content writing wherein 3.5 years of experience

Leave a Comment